காப்பீடு துறையில் காப்பீடு முகவர்களாக உங்கள் தொழிலை மேம்படுத்தி கொள்ளுங்கள்


Join us
/ காப்பீடு துறையில் காப்பீடு முகவர்களாக உங்கள் தொழிலை மேம்படுத்தி கொள்ளுங்கள்

காப்பீடு முகவர்கள்

காப்பீடு முகவர்கள் காப்புறுதி நிறுவனத்திற்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே இணைப்பு பாலமாக செயல்பட்டு காப்பீடு நிறுவனத்தின் விற்பனையை பெருக்குகிறார்கள். மேலும் வாடிக்கையாளர்களுக்கு சரியான காப்பீடு பற்றிய அறிவுரைகள் வழங்குதல், விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்ய உதவுதல், காப்புறுதி இழப்பீடு பெற வாடிக்கையாளர்களுக்கு உதவுதல் மற்றும் பல. இவ்வாறு முகவர்கள் பல்வேறு பொறுப்புளை வகிக்கிறார்கள்.

காப்புறுதி நிறுவனத்தில் முகவர் தொழிலை தேர்ந்தெடுக்க காரணங்கள்?

பல்வேறு நன்மைகளின் காரணமாக காப்புறுதி நிறுவனத்தில் தனி நபர்கள் முகவர் தொழிலை தேர்ந்தெடுக்கிறார்கள். தனி நபர் முகவர்கள் -


 • நமக்கு நாமே முதலாளி விருப்பம் போல வேலையை செய்யலாம்.
 • வரம்புகளுக்கு உட்படாத வருமானம் ஈட்டலாம்.
 • தரகு(கமிஷன்) தொகை அல்லாமல் பல்வேறு பரிசுகள் மற்றும் அங்கீகாரங்கள் பெறலாம்.

இந்த நன்மைகளை வேண்டி மக்கள் காப்புறுதி முகவர்கள் ஆக விருப்பம் கொள்கிறார்கள்

யாரெல்லாம் காப்பீடு முகவர்கள் ஆகலாம் ?

முகவர்கள் ஆவதற்கு இரண்டு முக்கிய தகுதிகள் தேவை. இந்த இரண்டும் உங்களிடம் இருக்குமானால் நீங்கள் முகவர்கள் ஆக விண்ணப்பிக்கலாம். அவை பின் வருமாறு .


 • குறைந்தபட்சமாக 18 வயது நிரம்பியிருக்க வேண்டும்.
 • கிராமபுறங்களில் வசிப்பவராக இருந்தால் 10ஆம் வகுப்பும், நகர்ப்புறங்களில் வசிப்பவராக இருந்தால் 12ஆம் வகுப்பும் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.

இந்த அடிப்படை தகுதிகளை பெற்றிருந்தால் ஒருவர் தம்மை முகவராக பதிவு செய்து கொள்ள இயலும். காப்புறுதி நிறுவனங்கள் இவ்வாறு படித்தவர்கள், பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு, பட்டதாரிகளுக்கான பகுதி நேர வேலை வாய்ப்பு, கல்லூரி செல்லும் மாணவர்களுக்கான வேலை வாய்ப்புகளைத் தருகிறது. மேலும் இல்லத்தரசிகளும், பணி ஓய்வு பெற்றவர்களும் காப்புறுதி முகவர்கள் ஆகலாம்.

காப்புறுதி முகவர்கள் ஆவதற்கான வழிமுறைகள்

இந்தியக் காப்பீடு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமை (IRDA ) வழிமுறைகளின் படி முகவர்கள் ஆவதற்கான வழிகள். ஏதேனும் ஒரு குறிப்பிட்ட காப்புறுதி நிறுவனத்தில் முகவராக பதிவு செய்து கொண்டு, குறிப்பிட்ட காப்புறுதி பயிற்சி எடுத்து, குறிப்பிட்ட தேர்வு மையத்தில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதை நீங்கள் செய்து முடித்து விட்டால் நீங்களும் ஒரு காப்பீடு முகவர் ஆக முடியும். இதை இன்னும் சற்றே விரிவாக பார்ப்போம்.


 • முகவர்களுக்கான தேர்ச்சி தகுதி உங்களிடம் இருந்தால் நீங்கள் முகவராக பதிவு செய்திருத்தல் வேண்டும் .
 • உங்களுடைய KYC விவரங்களையும் மற்றும் ஆவணங்களையும் நீங்கள் எந்த காப்புறுதி நிறுவனத்தில் முகவராக விருப்பமோ அங்கே வழங்க வேண்டும்.
 • நீங்கள் வெற்றிகரமாக பதிவு செய்த பின் ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்திற்கு வகுப்பறை பயிற்சி எடுத்தல் வேண்டும்.
 • உங்கள் பயிற்சி முடிந்ததும் ஒரு தேர்வு வைக்கப்படும். இது IRDA நிர்ணயம் செய்த தேர்வாகும். இந்த தேர்வை நீங்கள் ஆன்லைன் (இணைய வழி) மற்றும் ஆப் லைனில் எழுதலாம். இணைய வழி தேர்வு மிகவும் பிரசித்தமானது.
 • இந்த தேர்வில் நீங்கள் தேர்ச்சி பெற்றால் நீங்கள் உரிமம் பெற்று முகவர்கள் ஆகலாம்.

காப்பீடு முகவர்கள் எவ்வளவு சம்பாதிக்கின்றனர்?

முகவர்கள் தங்கள் மூலம் ஈட்டிய காப்பீடு கட்டணத்தில் ஒரு பகுதியை தரகு (கமிஷன்) ஆக பெறுகிறார்கள். பல்வேறுபட்ட காப்பீட்டு திட்டங்கள் பல்வேறு விதமான தரகு (கமிஷன்) வழங்கப்படுகின்றன. முகவர்களின் தரகு (கமிஷன்) அவர்கள் கொண்டுவரும் காப்பீடு தொகையில் 5%-லிருந்து 40% வரை வேறுபடும். மேலும் நல்ல முகவர்களுக்கு விருதுகளும் அங்கீகாரங்களும் கிடைக்கும். இந்த திட்டங்கள் முகவர்களை கூடுதல் தரகு, பரிசு பொருட்கள், பரிசு வவுச்சர்கள், வெளிநாட்டு பயணங்களை பெற வழி செய்கிறது.

முகவர்கள் பெறும் கமிஷன் அமைப்பை அறிந்து கொள்வதற்கு இங்கே கிளிக் செய்யவும். (வீட்டு விற்பனைக் காப்பீடிலிருந்து பணம் சம்பாதிப்பது எப்படி)

Mintpro என்ன வழங்குகிறது?

காப்புறுதியின் விற்பனை பிரதிநிதியாகும் ஒரு வாய்ப்பு. விற்பனை பிரதிநிதி ஒரு வகையான காப்பீடு முகவர் ஆவார். Mintpro-வின் விற்பனை பிரதிநிதி ஆவதன் மூலம் உங்களால் பல்வேறு முன்னணி காப்பீடு நிறுவனங்களின் காப்பீடு திட்டங்களை விற்பனை செய்ய முடியும். ஆயுள் காப்பீடு, பொது காப்பீடு திட்டங்களான உடல் நல காப்பீடு, வாகன காப்பீடு, இரு சக்கர காப்பீடு திட்டங்கள் உங்களால் விற்பனை செய்ய முடியும்.

விற்பனை பிரதிநிதி முகவர் தகுதிகள் மற்றும் வழிமுறைகள்

 • இந்தியக் காப்பீடு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமை (IRDAI) நிர்ணயித்தபடி முகவராக, இரண்டு குறிப்பிட்ட தகுதிகள் வேண்டும். நீங்கள் இந்த தகுதிகள் பெற்றிருப்பின் நீங்கள் காப்பீடு முகவராக விண்ணப்பிக்க முடியும். தகுதிகள் பின்வருமாறு
 • குறைந்தபட்சம் 18 வயது
 • உங்களுடைய கல்வி தகுதி குறைந்தது 10வது தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்
 • இந்த அடிப்படை தகுதி உடையவர்கள் முகவராக விண்ணப்பிக்கலாம். காப்புறுதி நிறுவனங்கள் இவ்வாறு படித்தவர்கள், பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு, பட்டதாரிகளுக்கான பகுதி நேர வேலை வாய்ப்பு, கல்லூரி செல்லும் மாணவர்களுக்கான வேலை வாய்ப்புகளைத் தருகிறது. மேலும் இல்லத்தரசிகளும், பணி ஓய்வு பெற்றவர்களும் காப்புறுதி முகவர்கள் ஆகலாம். இந்த வழிமுறைகளை இன்னும் சற்று விரிவாக பார்ப்போம். இதை பின்பற்றி மற்றும் தேர்வில் நீங்கள் தேர்ச்சி பெற்றுவிட்டால் நீங்கள் ஒரு காப்பீடு விநியோகஸ்தர் ஆகலாம்.
 • முகவர்களுக்கான தகுதி உங்களிடம் இருந்தால் நீங்கள் பயிற்சி திட்டத்திற்காக விண்ணப்பிக்க வேண்டும்.
 • உங்களுடைய KYC ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
 • குறிப்பிட்ட காலத்திற்கான பயிற்சி மேற்கொள்ள வேண்டும்
 • பயிற்சி முடிந்தவுடன் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும்
 • தேர்வில் தேர்ச்சி பெற்றவுடன் நீங்கள் உரிமம் பெற்று முகவராக பணியாற்ற முடியும்.

விற்பனை பிரதிநிதி சான்றிதழ் காப்பீடு முகவர் ஆவதற்கு சிறந்த முறையாக ஏன் கருதப்படுகிறது?

ஒரு காப்பீடு முகவர் வாடிக்கையாளரையும் காப்பீட்டு நிறுவனத்தையும் ஒன்றாக இணைத்து காப்புறுதி ஒப்பந்த விற்பனையை சுலபமாக்குகிறார். மேலும் வாடிக்கையாளர்களுக்கு சரியான காப்பீடு பற்றிய அறிவுரைகள் வழங்குதல், விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்ய உதவுதல், காப்புறுதி இழப்பீடு பெற வாடிக்கையாளர்களுக்கு உதவுதல் மற்றும் பல. இவ்வாறு முகவர்கள் பல்வேறு பொறுப்புளை வகிக்கிறார்கள்.


விற்பனை பிரதிநிதி (Point of sales person) என்னும் காப்பீடு முகவர்களுக்கான புதிய முறை உரிமம் IRDA (Insurance Regulatory Development Authority of India)-வால் 2015-இல் உருவாக்கப்பட்டது. தற்போது காப்பீடு முகவர் தொழிலை மேற்கொள்ள இது மிக சிறந்த வழியாகும். ஏன்? காப்பீடு முகவர்கள் ஒரே ஒரு காப்பீடு நிறுவனத்துடன் பணி புரியும்போது அந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை மட்டுமே விற்க முடியும். அதாவது உயிர் காப்பீடு மற்றும் உயிர் அற்றவைகளின் காப்பீடு. ஆனால் இன்றைய வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகள் அதிகரித்துவிட்டன. வாடிக்கையாளர்கள் அனைத்து காப்பீடு விவரங்களையும் தெரிந்து கொள்ள விரும்புகின்றனர் மற்றும் சிறந்ததை தேர்வு செய்ய முகவர்களின் ஆலோசனையை எதிர்பார்க்கின்றனர். விற்பனை பிரதிநிதியின் சான்றிதழ் மற்றும் உரிமம் உங்களுக்கு உதவியாக இருக்கிறது. ஒரு விற்பனை பிரதிநிதியாக உங்களால் பல்வேறு காப்பீடு நிறுவனங்களின் உயிர் மற்றும் உயிரற்ற காப்பீடு திட்டங்களான டேர்ம் லைப், யூலைப், எண்டோவ்மென்ட் லைப், மோட்டார், உடல் நலம், தனி நபர் விபத்து, வீடு மற்றும் பயணம் போன்ற காப்பீடுகளை விற்க முடியும். விற்பனை பிரதிநிதி பாரம்பரிய காப்பீடு முகவர்களை விட விரிவான நோக்கம் உடையதாகிறது. எனவே பெரும்பான்மையான தனி நபர்கள் விற்பனை பிரதிநிதியாகும் வழியைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

பற்றி அறிந்து காப்பீட்டு முகவர் சான்றிதழ் நிச்சயமாக மற்றும் காப்பீட்டு முகவர் தேர்வு.